மகேஷ் பாபு நடிப்பில் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஏப்ரல் 24ஆம் தேதி மெக்சிகோவில் இந்த படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற உள்ளது என்று எஸ்.எஸ். கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், எஸ்.எஸ். ராஜமவுலி காணொளி மூலம் உரையாற்ற உள்ளார். மேலும், படத்தின் ஆரம்பகட்ட காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு பின்னணிக் காட்சிகள் போன்ற இதுவரை வெளியிடப்படாத பிரத்யேக காட்சிகள் அங்கு திரையிடப்பட உள்ளன.
—
