ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பெத்தி திரைப்படம் அடுத்ததாக வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை புச்சிபாபு சனா இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சிவராஜ்குமார் மற்றும் ஜெகபதி பாபு நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் முதலில் மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதன் வெளியீட்டு தேதி ஏப்ரல் 30ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது, அந்த தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டு, ஜூன் மாதத்தில் படம் வெளியாகும் என குறிப்பிட்ட தேதி அறிவிக்காமல் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடைபெற வேண்டியுள்ளது என்றும், குறிப்பாக ஒரு பாடல் காட்சியை படமாக்க வேண்டியிருப்பதால் தான் படம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் புச்சிபாபு சனா, படப்பிடிப்பு தளத்தில் ராம் சரண் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, பெத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு மேலும் ஆறு நாட்களில் நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.
—
