திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த தவெக தலைவரும் நடிகருமான விஜய்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்யில், விஜய் அவர்கள் வேல் ஏந்தியவாறு விஸ்வரூப தரிசனம் செய்தார். கடலில் இறங்கி புனித நீராடி வழிபாடு செய்த அவர், மலர்கள் சமர்ப்பித்து முருகனை பக்தியுடன் வழிபட்டார்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து தனது வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டார். இந்த தேர்தலின் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாக உள்ளன. விஜயின் அரசியல் வருகையால் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில், சென்னையிலிருந்து தனி விமானத்தில் அதிகாலை 1.30 மணியளவில் மதுரை வந்தார் விஜய். நள்ளிரவு முதலே விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் அவரை காணக் காத்திருந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்க்கு சென்று, பட்டு வேட்டி சட்டை அணிந்து சுவாமி தரிசனம் செய்தார். தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள இந்த சூழலில், அவரது இந்த தரிசனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வேல் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading