கவின் – நயன்தாரா நடித்துள்ள ‘Hi’ படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரல்!

நயன்தாரா, கவின் உடன் ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் ஹாய். வயதில் மூத்த பெண்ணை ஒரு இளைஞன் காதலிப்பது மற்றும் அந்த காதல் உறவில் உருவாகும் சிக்கல்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். மேலும், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஜி ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

தற்போது, இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. “கன்னக்குழியா, புதைகுழியா குழப்புறியே.. கண்ணு வழியா உள்ளுக்குள்ள நீ நுழையுறியே, கருப்பட்டியா உன்னை எனக்குள்ள விழுங்குறியே” என்று தொடங்கும் இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார். இந்த பாடலின் வரிகளை இயக்குனர் விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். முழுமையாக நயன்தாராவின் அழகை போற்றும் விதமாக அமைந்துள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த இனிமையான காதல் மெலடி பாடல் என ரசிகர்கள் இதனை பாராட்டி வருகின்றனர். மேலும், வயது வித்தியாசம் இருந்தபோதிலும் கவின் – நயன்தாரா ஜோடி திரையில் அழகாக பொருந்தியுள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading