நடிகர் வெங்கடேஷூக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்? வெளியான புது அப்டேட்!

கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கு திரையுலகில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து ரவுடி ஜனார்த்தனா என்ற படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவின் முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டிவும் இணைந்துள்ளார். இதன் மூலம், தன்னைவிட சுமார் முப்பது ஆண்டுகள் வயது அதிகமான நடிகருடன் முதன்முறையாக ஜோடியாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதனால், இந்த படத்திற்காக அவரது சம்பளம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. மேலும், 2027ஆம் ஆண்டின் சங்கராந்தி விழாவை முன்னிட்டு இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading