நான் எந்த விஷயத்தையும் கஷ்டமாக எடுத்துக் கொள்வதில்லை….வாழ்க்கையில் தடைகள் வருவது இயல்பானது…. ஹிப் ஹாப் ஆதி டாக்!

ஹிப் ஹாப் ஆதீ, ‘ஹிப் ஹாப் தமிழன்’ என்ற இசை ஆல்பத்தின் மூலம் பரவலாக அறிமுகமாகி, பின்னர் சினிமா துறையில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த சூழலில், அவரது வாழ்க்கையில் சந்தித்த தோல்விகளில் இருந்து அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹிப் ஹாப் ஆதீ, “நான் எந்த விஷயத்தையும் கஷ்டமாக எடுத்துக் கொள்வதில்லை. வாழ்க்கையில் பல தடைகள் வருவது இயல்பானது. ஆனால் அந்த தடைகளை கடந்து முன்னேறும்போதுதான் வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமாகவும் அழகாகவும் மாறுகிறது” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “ஒரு தடையை முட்டுக்கட்டையாக பார்க்காமல், அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டும். வெற்றியும் தோல்வியும் இரண்டும் வாழ்க்கையில் ஒரு அனுபவம் மட்டுமே. நாம் நினைத்த இலக்கை அடைய வேண்டுமெனில், நமக்கு பிடித்த விஷயத்திற்காக சிரமங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்க வேண்டும்” என்று தனது வாழ்க்கை தத்துவத்தை பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading