தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக அஜித் குமார் துபாயில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். திரைப்படப் படப்பிடிப்பு மற்றும் கார் பந்தய நிகழ்ச்சிகள் போன்ற பணிகளுக்காக துபாயில் தங்கியிருந்த அவர், நள்ளிரவு நேரத்தில் சென்னை வந்தடைந்தார்.
ஒவ்வொரு தேர்தலிலும் முதல் வாக்காளர்களில் ஒருவராக வந்து வரிசையில் நின்று வாக்களிப்பது அஜித் குமார் அவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த முறையும், சென்னை திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கை செலுத்த உள்ளார்.
