ஜூனியர் என்டிஆர் – பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் முன்னோட்டக் காட்சி வரும் மே 20ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தெலுங்குத் திரைப்படத் துறையின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ஜூனியர் என்டிஆரின் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இப்படத்தில் நடிக்கவில்லை என முன்பே அறிவித்திருந்ததால், படத்தைச் சுற்றி சில குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதன் மூலம் அந்த குழப்பம் தெளிவடைந்துள்ளது. ‘கேஜிஎப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு ‘சலார்’ திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இந்தப் படத்தை முடித்ததும் ‘சலார் 2’ படத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading