ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் விக்ரம் பிரபு!

‘சிறை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கதைகளைத் தேர்வு செய்வதில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார் விக்ரம் பிரபு. குறிப்பாக, அடுத்த சில ஆண்டுகள் போலீஸ் கதாபாத்திரங்களில் நடிக்காமல் இருக்க வேண்டும் என்ற முடிவை அவர் எடுத்துள்ளார். இதன் காரணமாக, போலீஸ் வேடத்தில் வந்த பல கதைகளை அவர் மறுத்துவிட்டதாக முன்பே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சித்தார்த் புதுமுக இயக்குநரின் திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடிக்க உள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ராகுல் தனது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கவும் படக்குழு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading