தமிழில் மேயாதமான், ஆடை’ போன்ற படங்களை இயக்கிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ரத்ன குமார். தற்போது ‛29′ என்ற படத்தை இயக்கி உள்ளார். நடிகர் விது, நடிகை ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோருடன் மாஸ்டர் மகேந்திரன், பிரேம்குமார், அவினாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் மேன்சன் குத்து பாடல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. மேலும் ’29’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் இந்த படம் வருகிற மே 8ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் காதல் கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
