நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மம்முட்டியின் ‘படயாத்ரா’ திரைப்படம்?

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது தனது 84வது வயதிலும் புதிய படைப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர், மம்முட்டியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு படயாத்ரா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

முன்னதாக மம்முட்டியை வைத்து ஆனந்தரம், விதேயம், மதிலுகள் போன்ற பல சிறந்த படங்களை அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்நிலையில், தற்போது உருவாகி வரும் படயாத்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதை தவிர்த்து, நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படம் ஓடிடி வெளியீட்டிற்கு முன்பாகவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading