சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. வெளியானதும் இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதுடன், அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் திரைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தப் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிக்கிறார் என கூறப்படும் தகவலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 100 கோடி ரூபாய்க்கு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 160 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading