நவம்பர் 13-ல் நெட்பிளிக்ஸில் வெளியாகிறதா ‘ரணபாலி’?

தெலுங்குத் திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரணபாலி’. இதற்கு முன்பு ‘டாக்ஸிவாலா’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 1878-ம் ஆண்டு காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 13-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘ரணபாலி’ வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply