ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் நடிக்கும் அஜித் குமார்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கிடையே, சர்வதேச கார் பந்தயங்களிலும் அஜித் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

அஜித்தின் கார் பந்தய அணிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கேம்பா எனர்ஜி’ அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக உள்ளது. இதன் காரணமாக அவர் நடித்த கூல்டிரிங்ஸ் விளம்பரம் வெளியானபோது, அவரது தோற்றம் குறித்து ரசிகர்கள் சிலர் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் முன்வைத்தனர்.

இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத் தயாரிப்பான ‘இன்டிபெண்டன்ஸ் பவர் அப்’ பிஸ்கட்டின் விளம்பரத்திலும் அஜித் இடம்பெறுகிறார். இதற்காக அஜித்தின் ரேஸிங் அணியுடன் மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply