ஷாருக்கான் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கும் ‘கிங்’ திரைப்படத்தில் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
ஷாருக்கான் – தீபிகா படுகோனே மீண்டும் இணைந்துள்ள இப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. வெளியீட்டுத் தேதியில் மாற்றமில்லை என ஷாருக்கானும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான ‘து மில் ஜாயே’ வெளியிடப்பட்டுள்ளது. சச்சின் – ஜிகர் இசையமைத்துள்ள இப்பாடலை அரிஜித் சிங் மற்றும் எட் ஷீரன் பாடியுள்ளனர். பாடலில் ஷாருக்கான் – தீபிகா படுகோனே இடையிலான காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
