ஒத்திவைக்கப்பட்டதா நடிகை ரித்விகாவின் திருமணம்?

ரித்விகா, பரதேசி, மெட்ராஸ், கபாலி, டி.என்.ஏ போன்ற பல படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். மேலும், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று சிறந்த போட்டியாளராக வெற்றி பெற்றார்.

கடந்த ஆண்டு, தனது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்களை ரித்விகா தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். ஆனால் சமீபத்தில், அவரது திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இந்த தகவலை ரித்விகா தானே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடத்திய கேள்வி-பதில் நிகழ்ச்சியில், “உங்கள் திருமணத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா?” என்று ஒருவர் கேட்டபோது, “நான் நினைத்தபடி எதுவும் நடைபெறவில்லை” என்று அவர் பதிலளித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading