ஆரி ஆர்ஜுனின் ‘பகவான்’ படத்தில் நடிக்கும் டோலிவுட் நடிகை பூஜிதா!

தெலுங்கு நடிகையான பூஜிதா தமிழில் ‘தோழா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்த அவர், கடைசியாக ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஆரி ஆர்ஜுனனுடன் இணைந்து ‘பகவான்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அம்மன்யா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் சு. காளிங்கன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி, அஜெய் தாத்தா, ஜெகதீஷ், ஜி.வி. கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ப்ரசன் பாலா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவராஜ் அமைத்துள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குநர் கூறுகையில், நாம் அறிந்த மகாபாரதக் கதையின் ஒரு பகுதியும் இதில் இடம்பெறுகிறது. மேலும், இந்த படத்தில் ரசிகர்களுக்கு பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. பொதுவாக நாம் கவனிக்காமல் இருக்கும் ஒரு சாதாரண உயிரினமான பல்லி, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறுகிறது. இப்படத்தில் பல தனித்துவ அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில், “பகவான்” திரைப்படம் புதிய சிந்தனை, வித்தியாசமான கதை அமைப்பு மற்றும் பலத்த தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாகி, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் படைப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading