நடிகை சமந்தா கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘சுபம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமாகும். இருப்பினும், அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் ‘மா இன்டி பங்காரம்’ .
இந்த திரைப்படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் சமந்தா, கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தஸ்ஸாடியா’ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரபல பாடகி சின்மயி மற்றும் புண்யா செல்வா இணைந்து பாடியுள்ளனர். பாடல்வரிகளை ரகுமான் எழுதியுள்ளார்.
