தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் “ஐ அம் கேம்”. இந்த திரைப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர். இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. சுமார் 11 மாத காலத்தில், 156 நாட்கள் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்த படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மிகப்பெரிய செலவில் ஆக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாகும் இந்த படம், வருகிற ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading