‘ராஜன் வகையறா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதா? வெளியான புது தகவல்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னை பின்னணியில் நடைபெறும் கதையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் கோவில்பட்டியில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை நகரில் நடைபெற்று வந்த நிலையில், சில காரணங்களால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஏப்ரல் மாத இறுதிக்குள் சென்னை நகரில் துவங்கும் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் ஒரு பெரிய அட்டவணை படப்பிடிப்பும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், படத்தின் வேலைகள் மீண்டும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘அரசன்’ படத்திற்காக அமைக்கப்பட்ட செட்டில், படப்பிடிப்பு இடைவெளியில் இயக்குநர் அமீர், நடிகர்கள் கிஷோர் மற்றும் கென் ஆகியோர் நடிக்கும் ‘ராஜன் வகையறா’ திரைப்படத்தின் காட்சிகள் சில எடுக்கப்பட்டு வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் இந்தக் கதையை வெப் தொடர் வடிவில் உருவாக்க திட்டமிட்டிருந்த இயக்குநர் வெற்றிமாறன், தற்போது அதை திரைப்படமாக உருவாக்குகிறாரா அல்லது தொடர் வடிவில் வெளியிடப் போகிறாரா என்பது குறித்து எந்தத் தெளிவான தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இந்தக் கதையும் வடசென்னை உலகத்தைச் சுற்றியே நகரும் என கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading