திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை சான்யா மல்ஹோத்ரா!

டெல்லியைச் சேர்ந்த நடிகை சான்யா மல்ஹோத்ரா, ‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது நடன திறமையின் மூலம் முதலில் கவனம் பெற்றவர். அதன் பின்னர், 2016ஆம் ஆண்டு அமீர் கான் நடித்த ‘தங்கல்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘பதாய் ஹோ’, ‘போட்டோகிராபி’, ‘சகுந்தலா தேவி’, ‘லூடோ’, ‘கதல்’, ‘ஹிட்’, ‘ஜவான்’, ‘மிஸ்டர்ஸ்’, ‘மீனாட்சி சுந்தரேஷ்வர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துத் தனது திறமையை நிரூபித்துள்ளார். தமிழில் ‘தக் லைப்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜிக்குச்சா’ பாடலுக்கு அவர் நடனமாடியதும் குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் ஹிந்தி மறுபதிப்பிலும் அவர் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் அவர் நடித்த ‘கதல்’, ‘ஜவான்’, ‘சாம் பகதூர்’ ஆகிய திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடித்த ‘டோஸ்டர்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், திரைத்துறையில் தனது பத்தாண்டு பயணத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு அளித்த பேட்டியில், “பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதே நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்தப் பயணம் மிக அற்புதமாக இருந்தது. எனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளுக்கும் நான் மனமார்ந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தற்போது அவர் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கும் ‘பந்தர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், ‘சுந்தர் பூனம்’ திரைப்படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading