‘கான் சிட்டி’ படத்தின் ‘கொரியன் ஃபேமிலி’ பாடல் வெளியாகி வைரல்!

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘கான் சிட்டி’. இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இப்படத்தின் முதல் பாடலாக ‘கொரியன் ஃபேமிலி’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் வெளியான ஒரு மணி நேரத்திற்குள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்தப் பாடல் அடுத்த ஒரு வாரத்திற்கு சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் டிரெண்டாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading