‘NEEK’ பட நாயகன் பவிஷ் நாராயணன் – ரவி அரசு கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்?

நடிகர் தனுஷின் அக்கா மகனான பவிஷ், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஓரளவு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ‘லவ் ஓ லவ்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பவிஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க பல கதைகளை பவிஷ் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் ‘ஈட்டி’ மற்றும் ‘ஐங்கரன்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு, சமீபத்தில் பவிஷ் நாராயணனுக்கு ஒரு புதிய கதை கூறியுள்ளார். அந்த கதை பவிஷிற்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இவர்கள் இருவரும் இணைந்து புதிய திரைப்படம் உருவாகுவது உறுதியாகியுள்ளது. தற்போது இந்த திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading