ஏ.ஆர். ரஹ்மான் ‘கருப்பு’ படத்தில் இருந்து விலக காரணம் என்ன? விளக்கம் கொடுத்த இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி!

நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இணைந்தார். ‘மூக்குத்தி அம்மன்’ படம் வெளியான பின்னர் இருவரும் சந்தித்து இணைந்து பணியாற்ற முடிவு செய்திருந்தனர். இருப்பினும், சில காரணங்களால் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திலிருந்து விலகினார். தற்போது இதுகுறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து ஒரு டீசரும் மூன்று பாடல்களும் வெளியாகியுள்ளன. படம் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதுகுறித்து ஆர்.ஜே. பாலாஜி கூறுகையில், “மூக்குத்தி அம்மன் வெளியான பிறகு, நானும் ஏ.ஆர். ரஹ்மான் சாரும் சந்தித்தோம். நாம் இருவரும் இணைந்து பணியாற்றலாமா என்று அவரே முன்வந்து கேட்டார். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ‘கருப்பு’ படத்தின் கதையை அவரிடம் விரிவாக விளக்கினேன். அவர் அதனை நேர்மறையாக ஏற்றுக்கொண்டு ‘சிறப்பாக செய்யலாம்’ என்று கூறினார். அதன் பின்னர் ஐந்து முறை சந்தித்து ஆலோசனை நடத்தினோம்.

ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலைகள் காரணமாக, ‘இந்தப் படத்தை முழுமையாகச் செய்ய என்னால் முடியும் என உறுதியாக சொல்ல முடியவில்லை. உங்கள் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. இப்போது என்ன செய்யலாம்?’ என்று அவர் கேட்டார். அது எனக்கு வருத்தமாக இருந்தாலும், உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்ட சூழலில், சாய் அபயங்கரின் முந்தைய பணிகளை பார்த்து அவரை இசையமைப்பாளராக இணைத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading