இந்தியில் ஷாருக் கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கிய அட்லீ, தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘ராக்கா’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு விளம்பரப் போஸ்டர் சமீபத்தில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுடன் தீபிகா படுகோன், அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது ‘ராக்கா’ திரைப்படத்தில் ஷாருக் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிறிய காட்சியாக இருந்தாலும், அவரின் வருகையை மிகப் பிரம்மாண்டமாக படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருந்த ஷாருக் கான், ‘கிங்’ படத்திற்கான தனது தோற்றத்தை மாற்ற முடியாத காரணத்தால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை தவிர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
—
