கன்னடத்தில் ‘கேஜிஎப்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தென்னிந்தியாவைத் தாண்டி இந்திய அளவிலும் கவனம் பெற்ற நடிகராக யஷ் உருவெடுத்துள்ளார்.
தற்போது விரைவில் வெளியாகவுள்ள ‘டாக்ஸிக்’ என்ற பிரம்மாண்டமான படத்தில் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தை மலையாள இயக்குநர் கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இது அதிரடி அம்சங்களுடன் கூடிய கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படம் குறித்து யஷ் கூறுகையில், “இது வழக்கமான கேங்ஸ்டர் கதையாக இருக்காது. இயக்குநர் கீத்து மோகன்தாஸ் இந்தப் படத்தை முழுமையாக உளவியல் அணுகுமுறையில் உருவாக்கியுள்ளார். படப்பிடிப்பு நடைபெறும் போது இதை ஆங்கிலத்திலும் படமாக்கியுள்ளோம். அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. எனது நடிப்பில் ஆங்கிலத்திலும் வெளியாகும் முதல் படம் இதுவாகும்” என்று தெரிவித்துள்ளார்.
—
