துல்கர் சல்மானின் ‘ஐயம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு!

‘ஆர்.டி.எக்ஸ்.’ திரைப்படத்தின் இயக்குநர் நஹால் ஹிதாயத் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஐயம் கேம்’. சஸ்பென்ஸ் மற்றும் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சண்டைப் பயிற்சியாளர்களாக அன்பறிவு சகோதரர்கள் பணியாற்றியுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துல்கர் சல்மான் நடித்த கடைசி திரைப்படமான ‘காந்தா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading