இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, சிவதா, யோகி பாபு மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் ‘கருப்பு’ திரைப்படத்தில் த்ரிஷாவைச் சார்ந்த காட்சிகளுக்கான டப்பிங் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. பொதுவாக த்ரிஷா நடித்த பல படங்களுக்கு டப்பிங் கலைஞர்கள் குரல் கொடுப்பது வழக்கம்.
ஆனால், இந்த ‘கருப்பு’ திரைப்படத்திற்காக த்ரிஷா தானே தனது குரலில் டப்பிங் செய்துள்ளார். இதற்கு முன்பு அவர் நடித்த ‘ஆயுத எழுத்து’, ‘மங்காத்தா’, ‘சமர்’, ‘மன்மதன் அம்பு’, ‘லியோ’ போன்ற படங்களிலும் அவர் தானே டப்பிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
—
