தனுஷின் ‘கர’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘கர’ ஆகும். ‘போர் தொழில்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு எழுத்தாளர் ஆல்ஃபிரட் பிரகாஷ் திரைக்கதை எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில், 1990களில் நடைபெறும் வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

மேலும், இந்தப் படத்தில் ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார், மமிதா பைஜு, கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், ‘கர’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) சென்னை ஜவஹர்லால் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த ‘கர’ திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading