விளாத்திகுளத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய படம்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவம் தற்போது திரைப்படமாக உருவாகிறது.

இம்மானுவேல் அரசர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சாமுவேல் சார்ஜ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ‘யோகிடா’ திரைப்படத்தை இயக்கிய கவுதம் கிருஷ்ணா இயக்குகிறார். முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இதில் நடித்துவருகின்றனர். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விளவங்கோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் கவுதம் கிருஷ்ணா கூறியதாவது, “உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்காக நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம். இந்த திரைப்படம் பல உண்மை தகவல்களை கொண்டுள்ளது. அது மக்களிடம் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading