‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் நடிக்கும் சிவராஜ் குமார்!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றார். அந்த தோற்றம் அவருக்கு மிகுந்த கவனத்தை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ‘எங்கேயும் எப்போதும்’ மற்றும் ‘இவன் வேற மாதிரி’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவராஜ்குமார் நடிப்பில் அண்மையில் வெளியான ‘45’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading