‘ஜோ’ பட இயக்குனருடன் கைகோர்த்த ஜிவி.பிரகாஷ்… வெளியான புதிய படத்தின் அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி. பிரகாஷ் குமார், பல்வேறு மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவதுடன், நடிகராகவும் தனது பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ‘ஜோ’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடிக்க உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading