Advertisement

மிருணாள் தாக்கூர் கதைகளை சரியாக கவனித்து தேர்ந்தெடுக்க வேண்டும்… வேண்டுகோள் வைத்த கல்கி இயக்குனர் நாக் அஸ்வின்!

தெலுங்கில் வெளியான ‘சீதாராமம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பெரும் புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். அதன் பின்னர், அவர் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் வெற்றி படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் வெளியான ‘டகாய்ட்’ திரைப்படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ‘கல்கி’ திரைப்பட இயக்குநர் நாக் அஸ்வின் கலந்து கொண்டார். அப்போது, அவர் மிருணாள் தாக்கூரை பாராட்டியதுடன், அவரைச் சார்ந்த தனது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

அவர் தனது உரையில், “மிருணாள், நீங்கள் உண்மையில் மிகவும் திறமையான நடிகை. ஆனால் சில நேரங்களில் நீங்கள் ஏன் அதற்கு இணையான வலுவான தாக்கம் இல்லாத கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறீர்கள் என்று எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. நீங்கள் இன்னும் வலுவான கதாபாத்திரங்களுக்கு தகுதியானவர். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் உணர்ச்சியின் ஆழத்தை நீங்கள் வெளிப்படுத்தும் விதம், மதுபாலா மற்றும் ஸ்மிதா பாட்டில் போன்ற சிறந்த நடிகைகளின் தொடர்ச்சியாக உங்களை நினைக்க வைக்கிறது. ஆகவே, தயவுசெய்து சாதாரணமாக கதைகளை தேர்வு செய்யாமல், வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்யுங்கள்,” என்று கூறினார். அவரது இந்த வார்த்தைகள் மிருணாள் தாக்கூரை நெகிழச் செய்ததுடன், அவர் அதை ஏற்றுக்கொண்டு சம்மதமாக தலையசைத்தார்.

Add a Comment

Leave a Reply