ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பில் இணைந்த சாய் அபயங்கர்!

தென்னிந்திய திரைப்பட இசை உலகில் ஜென் Z தலைமுறையின் இசை விருப்பங்களை கவர்ந்த இசையமைப்பாளராக சாய் அபயங்கர் உருவெடுத்துள்ளார். ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான அவர், தற்போது திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அதிலும் தனது ஆரம்ப காலத்திலேயே சூர்யா, அல்லு அர்ஜூன், தனுஷ், சிம்பு, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளைப் பெற்று வருவது அவரது வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

இந்த நிலையில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் சாய் அபயங்கர் இணைந்துள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த கூட்டணியில் ஒரு சுவாரஸ்யமான குழப்பம் நிலவுகிறது. அதாவது, இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளாரா அல்லது நடிகராக நடிக்க உள்ளாரா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.

அவர் ஆல்பம் பாடல்களில் நடனமாடி வந்தாலும், திரைப்படங்களில் தற்போது நடிக்க விருப்பமில்லை என்று கூறி வருகிறார். அந்த வகையில் பார்க்கும்போது, அவர் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றுவார் என்றே கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading