புராண திரைப்படத்தில் நடிக்கிறாரா ஜூனியர் என்டிஆர்?

நடிகர் ஜூனியர் என்டிஆர், ‘வார் 2’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘டிராகன்’ திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த படம் ஆக்‌ஷன் மையமாக உருவாகி வரும் நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதற்குப் பிறகு, இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு புராண திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘சண்முகுடு’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம், பெருமாளை மையமாகக் கொண்ட புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 20ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. அகில இந்திய அளவில் உருவாகும் இந்தப் படத்தில், பல மொழிகளில் இருந்து முன்னணி நடிகர்கள் இணைவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading