‘டிஎன் 2026’ திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய சீமான்!

உமாபதி ராமையா இயக்கத்தில், நட்ராஜ் நடித்துள்ள ‘டிஎன் 2026’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்திற்கு தர்புர்கா சிவா இசையமைத்துள்ளார். இதில் நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அரசியல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவான இந்த படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘டிஎன் 2026’ திரைப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் சூழல்கள், அவலங்கள் மற்றும் நிர்வாக குறைபாடுகளை வெளிப்படுத்தும் படைப்புகள் தற்போது மிகக் குறைந்து விட்டன. ‘அமைதிப்படை’ போன்ற திரைப்படங்களை உருவாக்கும் போது எவ்வளவு சிரமங்களை சந்தித்தோம் என்பது எங்களுக்கே தெரியும்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இன்றைய அரசியல் பிரச்சனைகள் மற்றும் சமூக அவலங்களை யாரையும் பாதிக்காமல், அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவையுடன் இணைத்து வெளிப்படுத்துவது மிகவும் சிரமமான ஒன்று. ஆனால், இயக்குநர் உமாபதி ராமையா அதனை சிறப்பாக கையாள்ந்து, கதை ஓட்டத்தின் வழியாக சீரியஸான விஷயங்களை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்,” என்று அவர் பாராட்டியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading