பிரபல திரைப்பட பின்னணி பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே, திரைத்துறையில் தனக்கென தனித்துவமான முத்திரையை பதித்தவர். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த ஆஷா போஸ்லேவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ஆஷா போஸ்லே 92 வயதில் காலமானார். இவர் பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் மனைவி ஆவார். தாதாசாகேப் பால்கே, பத்ம விபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர். ஆஷா போஸ்லேவின் மறைவு திரையுலகினரை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிச்சொற்கள்: Asha Bhosle, Lata Mangeshkar, R D Burman, Bollywood, Indian Cinema, Playback Singer, Mumbai, Maharashtra, Music Industry, Awards, Tamil Cinema, Tamil Cinema News, Tamil News, Tamil Movies, Tamil New Movies, Cinema News, Cinema News Tamil, Kollywood, Kollywood Tamil News
—
