ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன், ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ்நாட்டின் கடலோர மக்களின் கடல்சார் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு விளையாட்டு ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Add a Comment
