ரசிகர்களை ஈர்க்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் ‘ஜியோ ஜியாலே’ பாடல்!

நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர் ராஜேஷ், தற்போது ஜீவாவை கதாநாயகனாக வைத்து ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஜீவாவின் திரைப்பயணத்தில் 47-வது படமாக உருவாகும் இப்படம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்பு ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது மட்டுமின்றி, அவரது சினிமா பயணத்திலும் குறிப்பிடத்தக்க படமாக அமைந்திருந்தது.

இந்நிலையில், ‘சிவா மனசுல சக்தி’ படத்திற்குப் பிறகு சுமார் 16 ஆண்டுகள் கழித்து ஜீவா – ராஜேஷ் கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகும் இந்தக் கூட்டணி என்பதால், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகரித்துள்ளது. இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், முந்தைய கூட்டணியின் நகைச்சுவை வெற்றியை இப்படமும் தொடருமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனிடையே, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன. இந்த நிலையில், யுவன் இசையில் இப்படத்தின் முதல் பாடலான ‘ஜியோ ஜியாலே’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading