வாழ்க்கை குறித்து செல்வராகவன் ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ்!

இயக்குநர் செல்வராகவன் சமீபகாலமாக திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வரும் அவர், தற்போது வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இயக்குனர் செல்வராகவன் தனது பதிவில், வாழ்க்கையில் யாரையும் நம்ப வேண்டாம் என்றும், எப்போது யார் நம்மை ஏமாற்றுவார்கள் என்பதை கணிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

வழக்கமாக திரைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட கருத்துகள் தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வரும் செல்வராகவன், இந்த முறை திடீரென இவ்வாறு பதிவிட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரது பதிவு குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading