என்டிஆர் பிரசாந்த் நீல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா சாகித் கபூர்? வெளியான புது அப்டேட்!

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர், தற்போது ‘கே.ஜி.எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 31வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை தற்காலிகமாக ‘என்டிஆர் – நீல்’ என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடிக்க இருந்தார். ஆனால் கால அட்டவணை சிக்கல்களின் காரணமாக அவர் விலகியதால், அந்த வேடத்தில் நடிக்க பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் தற்போது பாலிவுட்டின் இளம் நடிகரான சாகித் கபூருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிச்சொற்கள்: Jr NTR, Prashanth Neel, NTR31, Mythri Movie Makers, NTR Arts, Rukmini Vasanth, Tovino Thomas, Shahid Kapoor, Telugu Cinema, Pan India Movie, Tamil Cinema, Tamil Cinema News, Tamil News, Tamil Movies, Tamil New Movies, Cinema News, Cinema News Tamil, Kollywood, Kollywood Tamil News,

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading