‘திருவிளையாடல் ஆரம்பம்’ மற்றும் ‘கோ’ பட வாய்ப்புகள் தவறவிட்டது குறித்து மனம் திறந்த‌ நடிகர் பரத்!

நடிகர் பரத், 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திரையுலகில் அறிமுகமாகி சில வெற்றி திரைப்படங்கள் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தவர். ஆனால் 2010ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடித்த பல திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தொடர் தோல்விகளை சந்தித்தன.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “நீங்கள் தவறவிட்டதாக நினைக்கும் திரைப்படம் ஏதாவது உள்ளதா?” என்ற கேள்விக்கு பதிலளித்தார். அதில், முதலில் தனுஷ் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ திரைப்படம் என்னை நாடி வந்தது. ஆனால் நான் அதில் நடிக்க முடியாமல் தவறவிட்டேன். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தார் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், கே.வி. ஆனந்த் இயக்கிய ‘கோ’ திரைப்படத்தில் முதலில் சிம்பு நடிக்க இருந்தார். சில காரணங்களால் அவர் விலகியபின், அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால் நான் அப்போது மற்றொரு படப்பிடிப்பில் இருந்ததால் பதில் அளிக்க இரண்டு நாட்கள் தாமதமானது. இதனால் படக்குழு அவசரமாக படப்பிடிப்பை தொடங்க வேண்டிய நிலையில் ஜீவாவை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை ஆரம்பித்தனர் என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.

குறிச்சொற்கள்: Bharath, Dhanush, Thiruvilaiyadal Aarambam, Ko Movie, KV Anand, Simbu, Jiiva, Tamil Cinema, Actor Bharath, Kollywood, Tamil Cinema News, Tamil News, Tamil Movies, Tamil New Movies, Cinema News, Cinema News Tamil, Kollywood Tamil News

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading