க்ரைம் த்ரில்லர் கதையில் உருவான ‘தீயோர் கூடம்’ திரைப்படம்!

ரூல் பிரேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தியா சினிமா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தீயோர் கூடம்’. இந்த படத்தை ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் சாக்ஷி அகர்வால் தனிநாயகியாக நடித்துள்ளார்.

அவருடன் டேனியல் ஆனி போப், வையாபுரி, சாம்ஸ், வசந்தி, ஜேஸ்பர், சத்யா மற்றும் சம்யுதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சக்திவேல் எழுதி இயக்கியுள்ளார். வசந்த் இசைப்பேட்டை இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் குற்றம் சார்ந்த பரபரப்புக் கதையாக உருவாகியுள்ளது. ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு, ஒரு வீட்டில் திடீரென நடைபெறும் கொலை, அந்தச் சம்பவத்தில் சிக்கும் மூன்று பேரின் நிலை, அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு வருகின்றனர் என்பதைக் கூறும் வகையில் படம் அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading