சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதைக்களத்தில் நடிக்கும் நடிகை சுஹாசினி… இதுதான் கதைக்களமா?

நடிகை சுஹாசினி மணிரத்னம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். அந்த வகையில், 2023ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பூக்காலம்’ திரைப்படத்தில் நடித்த அவர், தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘அஞ்சாம் பிரமாணம்’ எனும் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் 1980களின் பின்னணியில் நடைபெறும் உளவியல் திரில்லர் கதையாக உருவாகி வருகிறது. கட்டுப்பாடுகள் நிறைந்த கிறிஸ்தவக் குடும்பத்தை மையமாகக் கொண்டு இந்தக் கதை அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா கொடுங்கல்லூரில் பூஜையுடன் நடைபெற்றது.

மேலும், ஹிந்தியில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த ‘பேச்சாரா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிமிஷா, இந்த படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார்.

குறிச்சொற்கள்: Suhasini Maniratnam, Anjaam Pramanam, Pookkalam, Nimisha, Sushant Singh Rajput, Bechara, Malayalam Cinema, Psychological Thriller, Kodungallur, Indian Cinema, Tamil Cinema, Tamil Cinema News, Tamil News, Tamil Movies, Tamil New Movies, Cinema News, Cinema News Tamil, Kollywood, Kollywood Tamil News,

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading