மாளவிகா மோகனன் மலையாளத் திரைப்படமான பட்டம் போலே மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துத் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாக் கெட் நாவல் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் வயதில் மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்தது குறித்து மாளவிகா மோகனன் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகினார். இதனால் சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம், “உங்களை நோக்கி வரும் விமர்சனங்களை நீங்கள் எளிதாக ஏற்றுக்கொள்வதற்கான காரணம் என்ன?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “திரையுலகில் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வருவது இயல்பான ஒன்று. விமர்சனங்கள் வருவது வளர்ச்சியின் அடையாளமாகவே நான் பார்க்கிறேன். எனவே என்னை நோக்கி வரும் எதிர்மறை கருத்துகளை, என் முன்னேற்றத்திற்கு உதவும் படிக்கட்டுகளாகவே கருதுகிறேன். எந்த விஷயத்தையும் எளிதாக அணுகினால் வாழ்க்கையில் பிரச்சினைகள் பெரிதாக தோன்றாது” என்று தெரிவித்துள்ளார்.
—
