Advertisement

‘ஜனநாயகன்’ படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்கவும்… பைரசியை ஊக்குவிக்க வேண்டாம்… நடிகை பூஜா ஹெக்டே வேண்டுகோள்!

நடிகர் விஜய் நடித்துள்ள அவரது கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படம் திரையரங்குகளில் வெளியாகுவது தாமதமாகி வந்த நிலையில், தற்போது அது இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும், தெலுங்கு திரையுலகை சேர்ந்த சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா போன்ற பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் அன்பான பார்வையாளர்களே… ஒரு திரைப்படம் என்பது எண்ணற்ற மணி நேர உழைப்பின் விளைவு. அது படைப்பாற்றலின் சவால்கள், தனிப்பட்ட தியாகங்கள், மேலும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உழைக்கும் ஒரு குழுவின் ஒருங்கிணைந்த முயற்சி.

எங்கள் திரைப்படம் இணையத்தில் லீக் ஆனதை காண்பது, என்னை மட்டும் அல்லாது அதில் உழைத்த ஒவ்வொருவருக்கும் மிகவும் வேதனையை அளிக்கிறது. அந்த திரைப்படம் சட்டவிரோதமாக பகிரப்படுவதைக் காண்பது மிகவும் வருத்தமளிக்கிறது. ஏனெனில், அந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரின் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் உழைப்பிற்கான மரியாதை இவ்வாறு குறைக்கப்படுகிறது.

மேலும், விஜய்யின் கடைசி திரைப்படத்தை நாம் அனைவரும் ஒன்றாக திரையரங்கில் கொண்டாட வேண்டியதல்லவா? எனவே தயவுசெய்து படம் வெளியாகும் வரை காத்திருந்து, சரியான முறையில் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்கவும். பைரசியை ஊக்குவிக்க வேண்டாம். அப்படிச் செய்தால்தான் சினிமாவும், கலைமும் தொடர்ந்து உயிருடன் இருக்கும்.

அன்புடன்,

கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் சார்பில்,

பூஜா ஹெக்டே” என தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply