‘Mr.X’ திரைப்படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவத்தை கொடுக்கும் – நடிகர் ஆர்யா!

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மேவ்ரிக் மூவீஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள திரைப்படம் ‘மிஸ்டர் எக்ஸ்’. இந்த திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் மனு ஆனந்த், இந்த படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு வந்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த திரைப்படம் குறித்து ஆர்யா பேசியபோது, இந்தக் கதையை முதலில் கேட்டபோது இது மிகப்பெரிய பிரம்மாண்டமாக இருக்கும் என எனக்கு தோன்றியது. நம்மை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் ஒரு தயாரிப்பாளர் படம் எடுப்பாரா என்ற சந்தேகத்துடனேயே நான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநர் மனு ஆனந்த் மிகவும் கடின உழைப்பாளர். இந்தப் படத்திற்காக நாங்கள் மூன்று ஆண்டுகளாக ஒன்றாகப் பயணித்திருக்கிறோம்.இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் இந்தப் படத்தில் சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தின் முதல் காப்பியை பார்த்தபோது நான் ஆச்சரியமடைந்தேன். பின்னணி இசை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஸ்டண்ட் சில்வா இந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமின்றி இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள கதாபாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தக் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. படம் பார்த்த பின் அனைவரும் கவுதத்தை பாராட்டுவார்கள். அவர் மிகவும் புதுமையாகவும் ரசிக்கும்படியாகவும் நடித்துள்ளார். சரத்குமார் சார் உடன் எனது முதல் காட்சி ராஜஸ்தானில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்திற்காக அவர் கடினமாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ்-பேக் உடன் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார். மஞ்சு வாரியரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள நான் கேட்டதுண்டு. அவரின் நடிப்பு எப்போதும் போல மிகச் சிறப்பாக உள்ளது. ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading