நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கயாடு லோஹர்!

தி பாரடைஸ் திரைப்படத்தில், நடிகை கயாடு லோஹர் நடித்துள்ள கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கயாது லோஹருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இயக்குநர் இந்தப் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகர் நானி நாயகனாகவும், கயாது லோஹர் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கயாடு லோஹர், முதலில் மலையாளத் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு, தமிழ், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவருகிறார். ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் அவருக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து ‘இதயம் முரளி’, ‘இம்மோர்டல்’, ‘சிம்பு 49’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார்.

சமீபத்தில் ‘பவழ மல்லி’ பாடலில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நானியுடன் நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ‘சுப்பு’ எனப்படும் சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் நடித்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.இதற்கு முன்பு, தெலுங்கில் ‘ஃபன்கி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை பாணியில் உருவான அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading