ஒருவரின் வாழ்க்கையில் வரமும் சரி, சாபமும் சரி இரண்டுமே இந்த ஒரு விஷயம் தான்- நடிகை ஸ்ரீலீலா டாக்!

தெலுங்குத் திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர் ஸ்ரீலீலா. தமிழில், சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், பவன் கல்யாண் உடன் நடித்த ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகியது. இந்தப் படம் வெளியான பின்னர் பெண்கள் குழுவுடன் நடைபெற்ற உரையாடலில் ஸ்ரீலீலா பகிர்ந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக மாறியுள்ளது.

அந்த உரையாடலில், “ஒரு பெண்ணாக நீங்கள் திரைத்துறையில் சந்தித்த மிகப்பெரிய சவால் என்ன? அதை எவ்வாறு சமாளித்தீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீலீலா, “ஒருவரின் வாழ்க்கையில் உணர்ச்சி அறிவு என்பது ஒரு வரமாகவும், சில நேரங்களில் சாபமாகவும் அமைகிறது. அதுவே என்னுடைய ஆற்றலை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. மாதவிடாய் காலத்தை எடுத்துக்கொண்டாலும், அந்த நிலையைக் கடந்து நான் எவ்வாறு செயல்படுகிறேன் என்பதிலேயே நான் கவனம் செலுத்துவேன். மற்ற விஷயங்களை சிந்தனையின் மூலம் கையாள முடியும், ஆனால் உணர்ச்சிகளை சமாளிப்பது மிகவும் முக்கியம்.

நான் அதிகமாக பாராட்டப்பட்ட பல பாடல்களில் நடனம் ஆடிய போது, நான் மாதவிடாய் காலத்திலேயே இருந்திருக்கிறேன். அதனால் அது எந்த விதத்திலும் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளப்பட முடியாது. நாம் வலிமையான சாதனைகளை அடைய விரும்பினால், நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் பொறுப்புகளையும் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக உடல் ரீதியான தடைகளை தாண்டிச் செல்ல வேண்டும். எனவே, உளவியல் அல்லது உடலியல் காரணங்களை எந்த நிலையிலும் சாக்காகக் கொள்ளக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading