மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘ஹே சினாமிகா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகை அதிதி ராவ். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர், தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
நடிகர் சித்தார்த்தைக் காதலித்து வந்த அதிதி ராவ், கடந்த 2024-ம் ஆண்டு எளிமையான முறையில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் இருவரும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது தங்களது புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கருப்பு நிற உடையில் அதிதி ராவ் நடத்தியுள்ள புதிய புகைப்படப் படப்பிடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே, நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் வயது குறித்த கேள்வி கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது, “47 வயதிலும் அழகு குறையாமல் இருப்பது எப்படி?” என்று அவரிடம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்த அதிதி ராவ், “அப்படி என்ன வயதாகிவிட்டது? ஏன் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கிறீர்கள்? எனக்கு இது பிடிக்கவில்லை” என்று அதிருப்தி தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
